கணக்கம் பாளையம் ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சி 1வது வார்டு விநாயகர் கோவில் பகுதியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் லதா (எ) காமாட்சி, அய்யாவு, மலர்செல்வி, மூர்த்தி மற்றும் குணசேகரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கண்ணன், உடுமலை.