அரியலூர் மாணவி விவகாரம் – இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்த வலியுறுத்தி பொள்ளாச்சியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் பொள்ளாச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். பொதுச் செயலாளர் கார்த்தி, பா.ஜ.க. மாவட்டத் தலைவர் வசந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், அறியலூர் மாணவி தற்கொலைக்கு முறையான விசாரணை நடத்த வலியுறுத்தியும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.