கவுன்சிலர்கள் வெளிநடப்பு – ஒன்றியக் கூட்டம் ஒத்திவைப்பு
பொள்ளாச்சியில் பி.டி.ஓ. வை கண்டித்து ஒன்றிய கூட்டத்திலிருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் விஜயராணி தலைமையில் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய ஆணையாளர் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் சிலர் வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன் மீது குற்றம் சாட்டி பேசினர். கவுன்சிலர்கள் பேசுகையில், வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ரூ. 15 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் சோலார் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
மனைவிகள் முழுமையடைந்த நிலையில் அதற்கான நிதியை ஒதுக்காமல் பி.டி.ஓ. அந்தப் பணியை ரத்து செய்கிறார்.
கிட்டசூராம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. ரூபாய் 3 லட்சம் செலவு செய்து கட்டிடம் கட்டும்போது அந்த இடம் ரிசர்வ் சைட் என்பதை அதிகாரிகள் ஏன் கவனிக்கவில்லை.
இவ்வாறு கவுன்சிலர்கள் புகார்கள் கூறியதை தொடர்ந்து வெளி நடப்பு செய்தனர். இதன் காரணமாக கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.