முதுமலை புலிகள் காப்பகம் வனக்கோட்டத்தில் உள்ள
நீலகிரிவனக்கோட்டத்தில் காட்டு யானை , புலி , சிறுத்தை , கரடி, காட்டு மாடு , மான் என பல்வேறு வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக ஒரு சில மர்ம நபர்கள் இறைச்சிக்காக வன உயிரினங்களை வேட்டையாடி வந்த நிலையில் வனத்துறையினர் சில நபர்களை பிடித்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்
மேலும் வனத்துறையினர் வனப்பகுதியில் ஒட்டி உள்ள தேயிலை தோட்டம் குடியிருப்பு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்
இந்த நிலையில்நடுவட்டம் வனசரகம் பகுதியில் சிலர் துப்பாக்கி உட்பட்ட ஆயுதங்களுடன் வேட்டையாடுவது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் படி சில்வர் கிளவுட் தோட்டத்தில் வனவிலங்கு வேட்டையாடப்பட்டது தொடர்பாக சோதனை செய்தனர்.
சந்தேகத்தின் பேரில் இருவரை பிடித்து தனித்தனியாக வனவிலங்குகள் வேட்டையாடுவதை குறித்து விசாரணை செய்யப்பட்டது.
மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து மேற்படி ஒற்றை குழல் துப்பாக்கிக்குரிய வெடிக்காத தோட்டாக்கள் 11 எண்ணிக்கை, வெடித்த தோட்டாக்கள் 2 எண்ணிக்கை, கத்தி, ரத்தக்கரை படிந்த கோடாரி, நெற்றி டார்ச் லைட், டார்ச் லைட், பர்ஸ் ஒன்று மற்றும் காற்று குழல் துப்பாக்கி ஒன்று ஆகியவற்றையும் கண்டுபிடித்து எடுக்கப்பட்டது. இவற்றையெல்லாம் பற்றி அவர்களிடம் விசாரிக்கப்பட்டது. சம்மந்தபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது .
தற்போது வன குற்றம் செய்த முக்கிய பிரமுகர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்