பெரம்பலூர் காமராஜர் வளைவு சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்காக பந்தல் அமைத்து கொடுத்த பெரம்பலூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாராட்டு.
கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் வெளியே செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவில் உள்ள சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி பந்தல் அமைத்து கொடுத்துள்ளார். இதனால் மக்கள் சிக்னலில் நிற்கும்போது சிறிது நேரம் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். இதனால் பெரம்பலூர் மாவட்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெருமகிழச்சி அடைவதாக மாவட்ட காவல்துறையினரை பாராட்டி வருகின்றனர்.