சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து மத்திய தொழில்கூடத்தில் பழுதாகி குப்பை போல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 500க்கும் மேற்பட்ட பிங்க் நிற பஸ்கள், வீடியோ வெளியானதால் பெண்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் புதிய அரசு பேருந்துகள் வாங்கலாம் என்று திட்டமிட்டு திமுக அரசு பேருந்துகள் பராமரிப்பில் மெத்தன போக்கை கையாள்கிறது என்ற குற்றச்சாட்டை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்த நிலையில் அதை உறுதிபடுத்தும் விதமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர மத்திய தொழில்கூடத்தில் 500க்கும் அதிகமான பிங்க் நிற பஸ்கள் பழுதாகி குப்பை போல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் பெரும்பாலும் டயர் இன்றியும், கண்ணாடி இன்றியும், இருக்கைகள் இன்றியும், சில பேருந்துகள் எலும்பு கூடு போலவும் காட்சி அளிக்கிறது.
மேலும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சிற்றுந்து பஸ்களும் பழுதாகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் திமுக அரசு பெண்களுக்கு இலவசமாக செல்வதற்காக புதிய வண்ணம் பூசி வழங்கப்பட்ட பிங்க் பஸ்களாக உள்ளது.
பெண்களுக்கு இலவசம் என்று ஒரு புறம் அறிவித்துவிட்டு, அழகான பேருந்துகளில் பிங்க் வண்ணத்தில் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டும் வண்ணம் பூசி திமுக அரசு பித்தலாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சென்னையில் மட்டும் 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் பழுதாகி நிற்கும் வீடியோ வெளியான நிலையில் தமிழகத்தில் கணக்கிட்டால் எத்தனை ஆயிரம் பேருந்துகள் இதுபோல இருக்கும் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர்.