திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் ஒரு கும்பல் யானை தந்தங்கள் விற்க முயற்சி செய்து வருவதாக மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றம் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் மத்திய வன உயிரின குற்ற தடுப்பு பிரிவின் தென் மண்டல அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இரகசிய தகவலின் அடிப்படையில் மத்திய வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவின் தென் மண்டல துணை இயக்குனர் Dr.கிருபா சங்கர் IFS அவர்களின் உத்திரவின்படி ஒரு தனி படை உருவாக்கப்பட்டது . தனிப்படையினர் தமிழக வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திருப்பூர் மாவட்ட வனப்பாதுகாப்பு படை வனச்சரகர் சுரேஷ் கிருஷ்ணன் , சேர்ந்து தாராபுரம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் கடந்த சில நாட்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தான் யானை தந்தம் கடத்தி விற்பனை செய்ய முயன்ற நபர்கள் என தெரியவந்தது.
அவர்களது தகவலின் அடிப்படையில் நடந்த சோதனையின் போது இரண்டு யானை தந்தங்கள் மற்றும் நான்கு மான்கொம்புகள் கைப்பற்றபட்டு குற்றவாளிகள் 1. சுப்ரமணியன் த/பெ காத்த முத்து, தாராபுரம், திருப்பூர்.2. செல்வராஜ் த/பெ தனசை, பாப்பம்பட்டி, திண்டுக்கல்.3. ரமேஷ் த/பெ ராமசாமி, தாராபுரம் திருப்பூர் ஆகிய மூன்று பேரை பிடித்து பிடி பொருட்கள் எங்கிருந்து வந்தது என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.