தாராபுரத்தைச் சேர்ந்த வாலிபர்.இவருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணமாகாததால் இவரது உறவினர்கள் தீவிரமாக பெண் தேடி வந்தநிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன் ‘அம்பி டேட் தி தமிழ் வே’ என்ற இன்டர்நெட் செயலி மூலம் கொடுமுடியை சேர்ந்த சந்தியா (30) என்பவர் பழக்கமானார். பின்னர் இவர்கள் இருவரும் பழநி அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். மணப்பெண்ணுக்கு தேவையான நகை, புடவை அனைத்தையும் வாங்கி கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர். வாலிபருடன் 3 மாதம் குடும்பம் நடத்தி கொண்டிருந்த சந்தியா கூறிய வயதுக்கும், அவரது தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் அவரது ஆதார் அட்டையை சந்தேகத்தின் பேரில் பார்த்தபோது கணவர் பெயர் இடத்தில் சென்னையைச் சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயதும் வித்தியாசமாக பதிவு செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபரின் குடும்பத்தினர் சந்தியாவிடம் விசாரணை செய்தபோது கோபமடைந்த சந்தியா,.வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை என மிரட்டி உள்ளார். இதனால் உஷாரான வாலிபர், பெண்ணிடம் சமாதானம் செய்வதுபோல் நைசாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறினார். விசாரணையில் அந்த பெண்ணுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து டிஎஸ்பி, கரூரில் காவல் ஆய்வாளர், மதுரையில் மற்றொரு போலீசாருடனும், கரூரில் ஒரு பைனான்ஸ் அதிபருடனும் என சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவருடன் தகராறு செய்து கொண்டு நகை பணத்துடன் சந்தியா தலைமறைவாகி விடுவது தொடர் கதையாக நீடித்து வந்துள்ளது சந்தியாவின் திருமண பட்டியலில் திருமணத்திற்கு பெண் தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், திருமணம் ஆன ஆண்கள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து சந்தியாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏராளமான தொழிலதிபர்கள் இவருடன் திருமணம் செய்து நகை பணத்தை இழந்து இருப்பதும், அதை வெளியே சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
மக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கல்
2 weeks ago
கழிவு நீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு !
September 12, 2023
Check Also
Close
-
உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆய்வு கூட்டம்November 22, 2024