திண்டுக்கல் மாநகராட்சி வரி வசூல் மையத்தின் இளநிலை உதவியாளர் சரவணன். இவர், வரி வசூல் பணத்தில் ரூ.5.16 கோடியை கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து, சரவணன், முறைகேடுகளை கண்காணிக்கத் தவறியதாக மாநகராட்சி கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை உதவியாளர் சதிஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள்.
இந்த முறைகேடு தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்களிடம் புகார் அளித்தார். இந்த புகாருக்கு ஆதாரமாக, தணிக்கை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, புகார் மனு மீது விசாரணை நடத்த திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டார். அதன்பேரில், நிதி முறைகேடு குறித்து சரவணன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்