
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு மதுபான கடைகளில் விற்கும் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை உறுதிபடுத்தியதை அடுத்து கொடைக்கானல் காவல்துறையினர் பெருமாள்மலையை அடுத்த அடுக்கம் சாமக்காட்டுபள்ளம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வரும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் விற்பனை செய்வதற்காக கடைக்குள் பதுக்கி வைத்திருந்த 1,150 மதுபான பாட்டில்களை கண்டுபிடித்த போலீஸார் அவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து தப்பியோடிய செல்வத்தை தீவிரமாக தேடி வருகின்றனர் .