செப்டம்பர் 14,
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விநாயகர் ஊர்வலம் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் மூன்று இடங்களில் நடந்தது. இந்த ஊர்வலங்களின் போது Paper Gun பயன்படுத்தக் கூடாது என மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. அறிவுறுத்தல்களை மீறி விநாயகர் ஊர்வலத்தின் போது Paper Gun பொருத்தி வந்த இரண்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி ஊர்வலங்கள் நாளையும் நடைபெற இருப்பதால் காவல்துறையின் அறிவுறுத்தல்களை மீறி இது போன்ற Paper Gun பயன்படுத்த வேண்டாம் என மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.