திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாருதல் , பராமரிப்பு பணிகள் மற்றும் சேதமடைந்த சாக்கடை கால்வாய்களை இடித்து அகற்றிவிட்டு புதிய சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது .
அதன் ஒரு பகுதியாக கிழக்கு ரத வீதியில் உள்ள சூசையப்பர் தேவாலயம் சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சாக்கடை கால்வாய் தூர் வாரும் பணியில் சாக்கடை கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதாக செய்தி வெளியானதை தொடர்ந்து அந்தப் பகுதியின் வார்டு கவுன்சிலர் செந்தில் பணிகள் நடைபெற்று வருவது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
அதில் பாலத்தை உடைக்காமல் ஒரு சிறு முயற்சியாக கழிவுகளை அகற்றுவதற்கு முயற்சி செய்து வெற்றி அடைந்துள்ளதாகவும் சுமார் 35 வருடங்களுக்கு மேலாக சுத்தப்படுத்தப்படாத சாக்கடைகளை மிகவும் சிரமப்பட்டு சுமார் 250க்கும் மேற்பட்ட டிராக்டர் லோடு அளவுள்ள சாக்கடை கழிவுகளை அகற்றியுள்ளதாகவும் மேலும் மீதமுள்ள சாக்கடை கழிவுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதனை பணிகள் நிறைவடையாத நிலையில் பணி நடைபெற்று வரும் இடங்களை வீடியோ எடுத்த சில நபர்கள் சாக்கடை கழிவுகள் சாலைகளில் தேங்கி இருப்பது போன்ற குற்றச்சாட்டுகளை சமூக வலைதளத்தில் பரப்பி வருவதாகவும் தெரிய வருகிறது . அதனால் மேற்கண்ட பணிகள் நடைபெற்று வரும் காணொளிகளை நாங்கள் வெளியிட்டுள்ளோம் என கூறினார்.
மேலும் இது தொடர்பாக நமது செய்தியாளரிடம் கூறுகையில் எனது வார்டு பகுதிகளில் எந்த குறையாக இருந்தாலும் என்னிடம் கூறினால் உடனடியாக அந்த குறையை மேயர் , துணை மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று சரி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.