
கலைஞராக இருந்தாலும் தற்போது உள்ள முதலமைச்சராக இருந்தாலும் தியாகிகளை மதிக்க கூடிய முதலமைச்சராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கருத்து.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது வீரவணக்கம் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு தூணிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன் வருகை தந்தார்.
அப்பொழுது பச்சேரி கிராமத்தில் மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இதனை தொடர்ந்து ஒண்டிவீரன் நினைவுத்தூனிற்கு அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சி தலைவர் கமல்கிஷோர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம்அமைச்சர் பேசுகையில், கலைஞராக இருந்தாலும், தற்போத உள்ள நமது முதலமைச்சராக இருந்தாலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மதிப்பளிக்கக்கூடிய முதலமைச்சராக விளங்கி வருவதாகவும், அவரின் மேலான உத்தரவுகிணங்க இன்று சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தூணிற்கு மரியாதை செலுத்த வந்திருப்பதாகவும் அவர் பேசினார். அப்போது சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர.