
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான எற்பாடு நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், க ட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கவரும் விதமாக ஆங்காங்கே மின்வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு கொடிகம்பங்களும் நிறுவப்பட்டிருந்தது. இன்று காலை சுமார் காலை 11 மணிஅளவில் திடீரென பலத்த காற்று வீசியதால் சுமார் நூறு அடி உயரத்திலிருந்து கொடிகம்பம் கீழே விழுந்தது. அப்போது, இதை கவனித்த தொண்டர்கள் அலறி அடித்து கொண்டு ஒடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் எற்படுத்தியது. ஆனால் நல்வாய்ப்பாக, உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. பின்பு கொடி கம்பம் பாத்துக்கப்பாக அப்புறப்படுத்தப்பட்டது,