தூத்துக்குடி அருகே பதினோராம் வகுப்பு மாணவனை கடத்திச் சென்று திருநங்கையாக மாற்ற முயற்சிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பூரணம்மாள் காலனியை சேர்ந்தவன்
மறுமலர்ச்சி செல்வன் பதினோராம் வகுப்பு படிக்கும் இந்த மாணவன் கடந்த ஒன்றரை மாதங்களாக காணவில்லை
இதுசம்பந்தமாக உறவினர்கள் விசாரணை செய்ததில் மாணவன் மறுமலர்ச்சி செல்வனை ஒரு கும்பல் கடத்திச் சென்று அவனை திருநங்கையாக மாற்ற மாத்திரைகள் கொடுத்து முயற்சி செய்து கொண்டிருப்பது தெரியவந்தது இதனால் அதிர்ச்சியடைந்த மறுமலர்ச்சி செல்வனின் தாய் தந்தையர் கோவில்பட்டி போலீசில் புகார் அளித்தனர் ஆனால் போலீசார் மாணவனை மீட்க இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை காவல்துறையின் இந்த போக்கை கண்டித்து மறுமலர்ச்சி செல்வனின் உறவினர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்