
நியூயார்க் : ஆப்பிரிக்கா உள்ளிட்ட கண்டங்களின் உண்மையான நிலப்பரப்பை துல்லியமாக பிரதிபலிக்கும் Equal Earth உலக வரைபடத்தை பயன்படுத்த ஐ.நா. பொதுச்சபை ஆதரவு தெரிவித்துள்ளது.
இதற்கான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் 164 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 6 நாடுகள் நடுநிலை வகித்தன.
பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் Mercator வரைபட முறை, கடல் வழிச் செல்லுதலுக்காக 1569-ல் உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த முறையில் பூமியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் அளவுக்கு அதிகமாக பெரிதாகக் காட்டப்படுகின்றன.
இதனால் ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற பகுதிகள் பெரிதாகவும், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற கண்டங்கள் சிறியதாகவும் தோற்றமளிக்கின்றன.
இந்தக் குறைபாட்டை சரிசெய்ய உருவாக்கப்பட்ட Equal Earth வரைபடம், கண்டங்களின் உண்மையான பரப்பளவுக்கு நெருக்கமான அளவை காட்டுகிறது.
இதனால் ஆப்பிரிக்கா உள்ளிட்ட கண்டங்கள் தற்போதைய வரைபடத்தை விட பெரிதாகவும், சரியான விகிதத்திலும் காட்சியளிக்கும் நிலையில் , இதனை 164 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. 6 நாடுகள் நடுநிலை வகித்தன. அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது.
புதிய தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ், மெர்கேட்டர் வரைபட முறையை கைவிடப் போவதாக அறிவித்துள்ளது.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் நோயல் பாரோ கூறுகையில், “வரைபடத்தை மாற்றுவதால் உலகம் மாறிவிடாது. ஆனால், தவறான பிரதிநிதித்துவத்தை சரிசெய்வது உண்மையை நிலைநாட்டும் நடவடிக்கையாகும்,” என்றார்.



