செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா

சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா முதலமைச்சர் விஜய் தலைமையில் பிரமாண்ட வரலாற்று விழாவாக நடத்தபடும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவாஜிகணேசன் 25 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி நினைவு மண்டபத்தில் அவரது உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, த.வெ.க கொள்கை தலைவர் காமராஜரின் பக்தர், முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்நாள் நண்பர், கலைத்துறையின் பிதாமகன் சிவாஜி கணேசன் என பெருமை தெரிவித்தார். தொடர்ந்து, சிவாஜி கணேசனின் நூற்றாண்டு, பொன்னெழுத்தக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்ட அவர், சினிமா வரலாற்றில் சரித்திரம் வியக்கும் வகையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் மிகப்பெரிய நூற்றாண்டு விழாவாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button