
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகளுக்காக பெண்கள், சிறுமிகள் பரத நாட்டியப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், பயிற்சியின் போது திடீரென கனமழை பெய்ததால் மைதானம் முழுவதும் மழைநீர் தேங்கிய நிலையிலும் கூட மழையை பொருட்படுத்தாமல் சிறுமிகளும் பெண்களும் தங்களது பரத நாட்டியப் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டனர். இதையடுத்து, மழையில் நனைந்தபடியே அவர்கள் நடன அசைவுகளை மேற்கொண்ட காட்சிகள் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தன. மழையையும் பொருட்படுத்தாமல் பரத நாட்டியப் பயிற்சியை தொடர்ந்த சிறுமிகளின் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

