
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களின் யோகா திறனை மேம்படுத்தவும், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு வீரர்களைத் தேர்ந்தெடுக்கவும் நடத்தப்படுகின்றன. அதில், 300க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளை மேயர் ஜெகன் பெரியசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து பத்மாசனம், புஜங்காசனம், சிரசாசனம், தனுராசனம், சவாசனம் மற்றும் தாடாசனம் உள்ளிட்ட யோகாசன செய்து மாணவ மாணவிகள் அசத்தினர். தொடர்ந்து, இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வருகிற 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியிலும், அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 19ஆம் தேதி தேசிய அளவில் பெங்களூரில் நடைபெறும் போட்டியிலும் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.



