திமுக அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் போல முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி அனிதா ராதாகிருஷ்ணன் பேசி வருகிறார்கள்….
துணைவேந்தர் நியமனம் செய்வதற்காக தேடுதல் குழுவில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்….
அதற்குரிய சட்ட திருத்தம் வரும் சட்டப்பேரவையில் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் அளித்த பேட்டியில்
எண்ணூர் அனல் மின் நிலையம் அருகில் உள்ள மீனவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளோம் எண்ணூர் – வட சென்னை அனல் மின் நிலையத்தால் அப்பகுதி மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.உப்பூர் அனல் மின் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்
சென்னை மாநகரில் கேபிள் கட் காரணமாக மின்தடை ஏற்படுகிறது என்றார்.
தொடர்ந்து பேட்டியளித்த அவர் திமுக அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் போல முன்னாள் அமைச்சர்கள் அதிமுக ராஜேந்திர பாலாஜி,திமுக அனிதா ராதாகிருஷ்ணன் பேசி வருகிறார்கள். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி சேர்ந்து எந்த முயற்சி எடுத்தாலும் ஒன்றும் அசையப் போவது இல்லை.
யாராவது எம்எல்ஏக்களை பணம் கொடுத்து வாங்க முயற்சி செய்தால் தான் குதிரை பேரம் ஆனால் எம்எல்ஏக்கள் விருப்பப்பட்டு ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்கள்.தவெக எம்.எல்.ஏ.க்களை காசு கொடுக்க பேரம் பேசிய வழக்கில் செந்தில் பாலாஜி உடன் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் அதுதான் குதிரை பேரம்
கல்வி விவகாரத்தில் ஆளுநரும் மத்திய அரசும் அவர்களுடைய விருப்பத்தை சொல்லலாம் ஆனால் இருமொழி கொள்கையில் கொள்கை முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது.
லஞ்சம் ஒழிப்பு துறை இயக்குனர் மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் பதிலளிக்கும்.லஞ்ச ஒழிப்புத் துறையில் அனைத்து புகார்களும் விரைவாக விசாரிக்கப்படும், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது, புகார் விசாரிக்கப்படுவதால் தான் ஒருவர் சிங்கப்பூர் சென்று வந்தார்.மின்சார துறையில் சோலார் திட்டத்திற்கு பார்ட்டி ஃபண்ட் வாங்கியதாக என்னிடமே புகார் வந்துள்ளது
தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் செய்வதற்காக தேடுதல் குழுவில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.அதற்குரிய சட்ட திருத்தம் வரும் சட்டப்பேரவையில் கொண்டுவரப்படுமா என்ற கேள்விக்கு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சர் தெரிவித்தார்.

