திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் குடியரசு தின விழா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாவட்ட அளவிலான கடற்கரை கையுந்துபந்து போட்டி நடைபெற்றது.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதேபோல, மாவட்ட அளவிலான பாக்சிங் சைக்கிள் போட்டியில் 75-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளர் ஜெ. ஆர். நொய்லின் ஜான், மாவட்ட விளையாட்டு அலுவலர் டி. சண்முகப்பிரியா, உடற்கல்வி இயக்குநர் பென்னி கிறிஸ்டியான், உடற்கல்வி ஆசிரியர்கள் ஏ. முத்துக்குமாரசாமி, ஏ. கணேசபாபு, பெ. ஏழுமலை, கிருஷ்ணமூர்த்தி, அந்தோணி சேவியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.