திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம், அதன்படி திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது,
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் சுமார் 200 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.அருணாசலேசுவரர் திருக்கோயிலுக்கு பௌர்ணமி அன்று வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவார்கள்.
பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற அருணாசலேசுவரரை வேண்டி நேர்த்திக் கடனாக காணிக்கை செலுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்கம் வெள்ளி போன்றவற்றை உண்டியலில் செலுத்துகிறார்கள், அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற ஐப்பசி மாத பௌர்ணமி மற்றும் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி மாலை நிறைவு பெற்றது, இதில் ரூ.3 கோடியே 71 லட்சம் ரொக்க பணமும், 230 கிராம் தங்கமும், 1140 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி தெரிவித்தார்.