க்ரைம்
Trending

நலத்திட்ட வழங்கல் நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கையில் கள்ள சந்தையில் மது இருப்பதாகவும் கஞ்சா விற்பதாகவும் தனது மகன் பாட்டிலால் தாக்கப்பட்டதாகவும் பெண் ஒருவர் மீட்டிங்கில் பேசியதால் பரபரப்பு

சென்னை திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவில் தமிழக முதல்வர் ஜோசப் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி இராகவா வெங்கடேஷ் தலைமையில் சகாயம் முன்னிலையில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தனக்கு பெண்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் செலுத்தியுள்ளனர் அது அண்ணன் ஜோசப் விஜய்க்கு செலுத்திய வாக்கு மேலும் அண்ணன் நேர்மையான ஆட்சி நடத்த சொல்லி உள்ளார் தாசில்தார் அலுவலகம் காவல் நிலையம் உள்ளிட்ட எந்த நிர்வாகத்திலும் லஞ்சம் இல்லாத நிர்வாகம் நடைபெறும் மதுபானம் இல்லாத போதை கலாச்சாரம் இல்லாத தமிழகத்தை உருவாக்க அண்ணன் போராடி வருகிறார்.

அதற்கு நாங்களும் ஒத்துழைப்பு தருகிறோம் மேலும் காவலர்களை இதற்காக எந்த சமரசமும் இன்றி குற்றவாளிகளை கைது செய்து வருகிறோம் என்று பேசிக் கொண்டிருக்கையில் வயதான பெண் ஒருவர் எழுந்து காலடி பேட்டையில் கள்ளச் சந்தையில் மதுபானம் பாட்டில்கள் விற்பதாகவும் கஞ்சா தனது மகனை ஒருவர் பாட்டிலால் அடித்ததாகவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூட்டத்தின் நடுவே எம்எல்ஏக்கு நிகராக பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது உடனடி எம்எல்ஏ நான் நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார் இருந்தாலும் அந்த பெண் அவருக்கு எதிராகவே பேசினார் இதனால் சில மணி நேரம் பரபரப்பு

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button