க்ரைம்
Trending

கடலலை இழுத்துச் சென்ற உக்ரைன் நாட்டு இளம் பெண்ணை உயிரை பணயம் வைத்து மீட்ட கடலோரகாவல் படையின் மெரினா உயிர்காக்கும் குழுவினர்

இளம்பெண்ணை கடலலை இழுத்துச் செல்வதும், உயிரை பணயம் வைத்து மெரினா உயிர் காக்கும் குழுவினர் மீட்கும் வீடியோ

நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை மெரினா கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு இளம்பெண் ஒருவர் திடீரென கடல் அலையால் இழுக்கப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரம் வரை கடலுக்குள் சென்று தத்தளித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கிருந்த பாதுகாப்பு பணி காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக “கடலோர காவல்படை குழுமத்தின் – மெரினா உயிர் காக்கும் குழுவினருக்கு” தகவல் அளித்து அதன் பேரில் உடனடியாக காவலர் முத்து சரவணன் மற்றும் மீனவர்களான பவினேஷ், விக்னேஷ் ஆகியோர் சற்றும் யோசிக்காமல் தங்களது உயிரை பணயம் வைத்து கடலுக்குள் குதித்து பத்திரமாக இளம் பெண்ணை கரைக்கு மீட்டு வந்தனர்.

பின்னர் மருத்துவ குழுவினர் வந்து முதலுதவி செய்து இளம் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் அனுஷ்கா என்பது தெரியவந்தது. சில தினங்களுக்கு முன்பாக தமது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு சென்னைக்கு சுற்றுலா வந்ததும், சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கி வருவதும் தெரிய வந்தது.

இந்த நிலையில், இளம்பெண் அனுஷ்கா மற்றும் அவரது நண்பர்கள் என மூன்று நபர்கள் இன்று மாலை மெரினா கடற்கரைக்கு வந்ததும் அப்போது அனுஷ்கா கடலில் குளிக்க செல்லும் போது கடலலை இழுத்துச் சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அனுஷ்காவை பத்திரமாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு போலீசார் அனுப்பி வைத்தனர்.

உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள் இளம்பெண்ணை மீட்டதற்காக கண்ணீர் விட்டு தங்களது நன்றியை காவல்துறையினருக்கு தெரிவித்து சென்றனர்.

இந்த நிலையில், கடலையில் இழுத்துச் செல்லப்பட்ட உக்ரைன் நாட்டு இளம் பெண்ணை தங்களது உயிரை பணயம் வைத்து மெரினா உயிர்காக்கும் குழு மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button