- சென்னை விமான நிலையத்தில் வீ த லீடர்ஸ் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சாரி தலைவா செய்தியாளர்களும் கூறியதாவது*
சுமார் 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் இரவு 8 மணிக்கு மேல் வெளியில் நடமாடவே பயந்த சூழ்நிலை இருந்தது, ஆனால் இன்று போதைப்பொருட்களின் பேராபத்தால் ஒட்டுமொத்த சமூகமும் அதே போன்றதொரு அச்சமான சூழலை எதிர்கொண்டுள்ளது.
முன்பு போதைப்பொருள் புழக்கம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட பணக்கார சமூகத்திற்ககுள் மட்டும் ரகசியமாக கிடைக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று, அரசுப் பள்ளிகளுக்கு அருகில் கூட சிந்தடிக் ட்ரக்ஸ் எளிதாக விற்கப்படும் அளவிற்கு, அனைத்துத் தெருக்களிலும், சிறு பள்ளிகளிலும் கூட அது பரவியுள்ளது.
இதனை எதிர்த்து அண்ணாமலை அவர்களின் தலைமையில், இந்த மாதத்தை ‘போதைப்பொருள் இல்லாத மாதம்’ ஆக அறிவித்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் முதன்முறையாக எந்தவித அரசியல் நோக்கமும் இல்லாமல், முற்றிலும் ஒரு சமூக நலனுக்காக பொள்ளாச்சியில் மிக பிரம்மாண்டமான முறையில் முதல் மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டிற்குத் தங்களை அணிதிரட்ட எந்தவொரு விளம்பரமோ அல்லது முறையான அழைப்போ செய்யப்படாத நிலையிலும், மக்கள் தாங்களாகவே முன்வந்து கலந்துகொள்கின்றனர். இதில் 50,000 முதல் 75,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே திருச்செந்தூரிலும் போதை ஒழிப்புக்காக மற்றொரு மிகப்பெரிய மாநாடு நடத்தப்படவுள்ளது.
தமிழக அரசியல் இனி வரும் காலங்களில் வெற்று விவாதங்களாக இல்லாமல், பிரச்சினைகளை மையப்படுத்திய அரசியலாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை விரும்புகிறார். அதன் முதல் படியாக இந்த மாதம் போதை ஒழிப்பு கையில் எடுக்கப்பட்டுள்ளது,
அடுத்த மாதம் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளை மையமாக வைத்து சென்னையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பிரச்சினை குறித்து யாராவது பேச மாட்டார்களா என்ற ஏக்கம் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெருமளவில் உள்ளதால், வெறும் மாரத்தான் அல்லது விழிப்புணர்வு ஓட்டங்கள் நடத்துவதோடு நிறுத்தாமல், சமூகத்தில் நேரடி ஆக்ஷன் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அண்ணாமலை பேசிய 25 நிமிட வீடியோ ஒன்றின் இறுதியில் குறிப்பிட்டதை மட்டுமே பார்த்து, We the Leaders அமைப்பில் தற்போது வரை 19 லட்சம் பேர் இணைந்துள்ளனர். யாரையும் வற்புறுத்தியோ அல்லது திட்டமிட்டோ இதில் இணைக்கவில்லை .
மிகப்பெரிய கட்சிகளின் ஆக்டிவ் மெம்பர்ஷிப் எண்ணிக்கையே சந்தேகத்திற்குரியதாக இருக்கும் நிலையில், இந்த எண்ணிக்கை மிக முக்கியமானது.
இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் 0% கூட அரசியல் ஈடுபாடு இல்லை, 100% சமூக நலன் சார்ந்த நோக்கம் மட்டுமே உள்ளது. இந்த அமைப்பு எப்போது அரசியல் கட்சியாக மாறும் என்பதைப் பொருத்தமான நேரத்தில் அண்ணாமலை அவர்களே முடிவெடுப்பார்.
மக்களுக்கு நல்லது செய்வதே உண்மையான அரசியல் என்பதால், இதையும் ஒரு நல்ல அரசியலாகவே பார்க்கிறோம்.
அனைத்து வீடுகளிலும் குழந்தைகள் இருப்பதால், இந்த போதை ஒழிப்புச் செய்தியை ஒரு முக்கிய சமூகக் கடமையாகக் கருதி இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேலும்,
இது முற்றிலும்
போதை ஒழிப்புக்கான நிகழ்வு என்பதால், மேகதாது அணை போன்ற அரசியல் ரீதியான கேள்விகளுக்குப் பதிலளிக்க மறுத்து, அது குறித்து அண்ணாமலை அவர்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் என கூறினார்.
