க்ரைம்
Trending

செய்தியாளர்கள் கேள்வி கேட்டவுடன் நேரடியாக கள ஆய்வில் இறங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் மாவட்டம்

நேற்றைய தினம் சிறுமலை பழையூரில் செயல்படாமல் இருந்த புறகாவல் நிலையத்திற்கு ஒரு தலைமை காவலர் மற்றும் காவலர்களை நியமித்து புறக்காவல் நிலையத்தை புதுப்பித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஜெயக்குமார் IPS அவர்கள் திறந்துவைத்து பேட்டியளித்தார் .

பேட்டியின்போது பத்திரிக்கையாளர்கள் சுற்றுலா பயணிகள் தாங்கும் விடுதிகள் தொடர்பான சந்தேகங்களை கேட்டனர் . உடனடியாக உடன் இருந்த காவல்துறை அதிகாரிகளிடம் தாங்கும் விடுதிகள் குறித்து விசாரித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உடனடியாக அருகில் இருந்த தனியார் தங்கும் விடுதி அமைந்திருக்கும் இடத்திற்குள் அதிரடியாக நுழைந்து ஆய்வு மேற்கொண்டதுடன் தங்கும் விடுதி நிர்வாகத்திற்கும் சம்மந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகளுக்கும் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளில் தகவல் சேகரித்தல் மற்றும் களஆய்வு மேற்கொள்வது தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கியதுடன் சட்ட விரோத செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்த ஆய்வின்போது திண்டுக்கல் புறநகர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் சங்கர் , திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் உட்பட காவல்துறையினர் உடன் இருந்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button