சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாயை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவர் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், தொடர்ந்து படிக்காமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட ராகேஷ் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சம்பவத்தன்று தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில், தூங்கி கொண்டிருந்த தனது தாய் சென்னி தேவியை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் கொடுரூமாக கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து, தனது தாயை காப்பாற்றுமாறு அக்கம்பக்கத்தினரிடம் உதவி கோரியுள்ளார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் காவல் நிலைய போலீசார், உயிரிழந்த சென்னி தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.