வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி ஜந்தர் மந்திரில் மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை வியாசர்பாடி எம் கே பி நகர் தபால் நிலையம் அருகே டெல்லி சந்திர மந்தரில் போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லி பாபு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் புகைப்படத்தை எரிக்க முயற்சி செய்த காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டில்லிபாபு உடன் காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு சமரசம் செய்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.


