கரூர் சம்பவம் குறித்து தவறான கருத்துகள் பரப்பியவர்கள் செயல் அறமற்றது என இயக்குனர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ஜனநாயகம் திரைப்படம் ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இயக்குனர் எச்.வினோத் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கே.வி.என் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கரூர் சம்பவம் குறித்து தவறான கருத்துகள் பரப்பியவர்கள் செயல் அறமற்றது என தெரிவித்த அவர், அந்த விஷயத்தில் ஊடகம் மீதும் தனக்கு வருத்தம் உள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து, தயாரிப்பு நிறுவனம் சார்பில் படம் இணயத்தில் கசியவிடப்பட்டதாக தெரிவித்த போது மிகுந்த வேதனை அடைந்ததாக தெரிவித்த அவர், அரசியல் லாபத்திற்காக இதுபோன்ற பழிகள் சுமத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். மேலும், விஜய் மீதான மரியாதையாலும் நேர்மையாலும் திரையரங்கை தேடிவரும் மக்களுக்கும் ரசிகர்களுக்கும் பெரிய சல்யூட் என தெரிவித்தார்.




