
மத்திய அரசை கண்டித்து CITU சார்பில் சங்கரன்கோவிலில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார். இதில் CITU அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணி, அஞ்சல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர் விபிஜி ராம்ஜி திட்டத்தை திரும்ப பெறுதல், மகாத்மா காந்தி வேலை திட்டத்தில் 200 நாள் வேலை, ரூ.700 கூலி, விவசாய கடன் ரத்து, பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அங்கு வலியுறுத்தப்பட்டன. இதை தொடர்ந்து, அனுமதியின்றி சாலையில் அமர்ந்து போராடிய 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


