செய்திகள்

தடை செய்யப்பட்ட வனப்பகுதியை ரீல்ஸ் எடுத்த த.வெ.க எம்எல்ஏ; கேரள போலீசார் விசாரணை

த.வெ.க எம்எல்ஏ முல்லை பெரியாறு அணை அருகே தடை செய்யப்பட்ட புலிகள் காப்பகப் பகுதியில் ரீல்ஸ் எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் கேரள போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.

முல்லை பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி 8-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கம்பம் எம்எல்ஏ, தேனி எம்பி ஆண்டிபட்டி எம்எல்ஏ, பெரியகுளம் எம்எல்ஏ சபரி ஐங்கரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து த.வெ.க எம்எல்ஏ சபரி ஐங்கரன், முல்லை பெரியாறு அணைப பகுதியை அடுத்த தேக்கடி அருகே தடை செய்யப்பட்ட புலிகள் காப்பக பகுதிக்கு சென்றார். அங்கு அவர் அனுமதி இன்றி ட்ரோன் பறக்க விட்டு ரீல்ஸ் எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவருடைய ரீல்ஸ் காட்சிகள் சர்ச்சையானதை அடுத்து கேரள காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button