கோவை சேரன் மாநகர் பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளியின் நான்காம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமி சம்பவதன்று தனது வீட்டில் உள்ள ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இது குறித்து சிறுமி அவரது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் 16 வயது சிறுவன் மீது பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பீளமேடு காவல்துறையினர் சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.