நெல்லை
மாவட்டம்நெல்லை
நெல்லை தொழிலதிபர் ஆர்எஸ் முருகன் அலுவலகத்தில் வருமான வரி சோதனை
நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்தை சேர்ந்தவர் ஆர் எஸ் முருகன். மாநிலத்தின் பிரதான சாலை ஒப்பந்தக்காரர் மற்றும் தொழிலதிபர். பாளையங்கோட்டை என் ஜி ஓ காலனியில் இவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளது.
இன்று காலை 10 மணிக்கு நெல்லை வருமானவரித்துறை அலுவலர் மகாராஜன் தலைமையில் வந்த அலுவலர்கள் தொழிலதிபர் ஆர் எஸ் முருகன் வணிக நிறுவனத்தில் மாலை 5 மணி வரை ஆய்வு செய்தனர்.

ஒப்பந்த பணிகளைச் செய்யும் போது அதற்கான தொகையில் ஒரு சதவீதம் அட்வான்ஸ் டாக்ஸ் ஆக கட்ட வேண்டும். அவ்வாறு கட்டப்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, முன்வரி செலுத்தாத தொகையை கணக்கிட்டு தொழிலதிபரிடம் அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் நெல்லை மாநகர் பகுதியில் அனைவரும் வியக்கும் வகையில் ஆர் எஸ் முருகன் மகனுக்கு பிரம்மாண்டமான திருமண விழா நடந்தது. அதற்காக இருவது கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சொந்த கட்சி மாவட்ட துணை செயலாளரையே வெளுத்து வாங்கிய மாமன்ற உறுப்பினர்
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொது சுகாதாரம் தொடர்பான தூய்மை இந்தியா திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாக கருதி பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் ஒதுக்கி மாநில அரசுகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதற்கென மாநில உள்ளாட்சி அமைப்புகளால் முறையாக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்த பணியாளர்களை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை இந்தியா திட்ட பணிகளை மேற்கொள்ள திமுக கட்சியை சேர்ந்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளரும் திண்டுக்கல் மாநகராட்சி…
-
மத்திய அரசு திட்டத்தில் மஹா ஊழல் செய்த திமுக கிழக்கு மாவட்ட துணைசெயலாளர்
திண்டுக்கல் மாவட்டம் ஐயா இந்த திமுக நிர்வாகியிடம் இருந்து எங்களது சம்பளத்தை வாங்கி குடுங்க என ஊழியர்கள் கதறல் புகாரளித்தும் எந்த வித நடவடிக்கை இல்லாததால் ஊழியர்கள் போர் கொடி தூக்கி உள்ளனர் இந்திய மக்களுக்காக மத்திய அரசின் மூலம் கொண்டுவரப்பட்டு இந்தியா முழுவதும் நடைமுறையில் இருந்து வரும் ஸ்வச் பாரத் எனும் தூய்மை இந்தியா திட்டம் திண்டுக்கல் மாநகராட்சிக்கு BPA கன்ஸ்ட்ரக்சன் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது இந்நிலையில் இந்த BPA கன்ஸ்ட்ரக்ஷனின் உரிமையாளராக திண்டுக்கல் திமுக…
-
ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை – மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் கடத்தல்
தற்போது புதியதாக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களது தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்தவண்ணம் உள்ளது. அதில் முக்கியமாக 717 அரசு மதுபான விற்பனை நிலையங்களை மூட உத்தரவிட்டது மட்டுமல்லாது சட்ட விரோத மது விற்பனையை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது ஆனால் ஆட்சி மாறியும் அதிகாரிகள் மாறாததால் காட்சிகள் மாறவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் மனமகிழ் மன்றங்கள் பெயரில் இயங்கிவரும் FL2 மதுக்கூடங்களில் சட்ட விதி மீறல்…