கோக்கு மாக்கு
Trending

சிலம்பம் போட்டியில் சிறப்பிடம்.. மாணவிகளுக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில், வருவாய் மாவட்ட அளவிலான மாணவிகளுக்கான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. இதில், 14, 17, 19 வயதுக்குள்பட்ட மாணவிகள் 23 எடை பிரிவுகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300 மாணவிகள் பங்கேற்றனர்.

இதில், கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 2 மாணவிகள் 19 வயதுக்குள்பட்ட பிரிவில் வெற்றி பெற்று தங்கப் பதக்கமும், 14 வயதுக்குள்பட்ட பிரிவில் 2 மாணவிகள் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இவர்களில் முதலிடம் பிடித்த பள்ளி மாணவிகள் வருகிற ஜனவரி மாதம் மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றனர்.

சிலம்பம் போட்டியில் சாதனைப் படைத்த பள்ளி மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பி. சரவணன், கே. பாக்யராஜ் ஆகியோருக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில், பள்ளியின் தலைமை ஆசிரியர் பி. சண்முகசுந்தரம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனி, பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழுத் தலைவர் பானுப்பிரியா ஆகியோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
  • Test
Back to top button