Featuredஅரசியல்கேலரிகோக்கு மாக்குக்ரைம்சுற்றுலாசெய்திகள்டிரெண்டிங்லைஃப் ஸ்டைல்விமர்சனங்கள்

காட்டு தீ ஒரு பக்கம் – மரக்கடத்தல் மறுபக்கம் – கொள்ளையடிக்கப்படும் கொடைக்கானல் மலை பகுதி

கோடை கால சுற்றுலா இடங்களில் முக்கியமானதும் மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படும் இடமாகவும் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் பல அரிய வலிக வன உயிரினங்கள் வாழும் பகுதியாகவும் கொடைக்கானல் மலை பகுதி விளங்குகின்றது .

கொடைக்கானல் வனக்கோட்ட வனப்பகுதியானது பெரும்பூனை இனங்களான புலி , சிறுத்தை போன்றவையும் பேருயிரான யானை போன்ற உயிரினங்கள் , காட்டு மாடு , மான் வகைகள் , அரியவகை அணில்கள் , தேவாங்கு , குரங்கு இனங்கள் உட்பட பல்லுயிர் வாழ் மண்டலமாக உள்ளது .

இந்த மலைப்பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் பல்வேறு வெளிநாட்டு மரங்கள் ( யூக்கலிப்டஸ் , பைன் போன்ற) ஒட்டு வளர்க்கப்பட்டு தற்போது வானளாவ வளர்ந்து சுற்றுலா பயணிகளை கவர்வது மட்டுமல்லாது மேக கூட்டங்களை தடுத்து நிறுத்தி குளிர்ச்சியை அப்பகுதியில் தக்க வைப்பது , மழைப்பொழிவுக்கு உதவுவ என பல இயற்கை நிகழ்வுகளுக்கு இது போன்று வானுயர வளரும் மரங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் சுற்றுசூழலை மேம்படுத்தவும் , இந்த மலை தொடர் பகுதிகளை பாதுகாக்கவும் மத்திய மாநில அரசுகள் மட்டுமின்றி சில வெளிநாடுகளும் பல நூறு கோடி ரூபாய்களை நிதியாக வழங்கி வருகின்றன .

இது போன்ற மலைப்பகுதிகளை பாதுகாக்க மாநில அளவில் மலைப்பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது . அதே போல மாவட்ட அளவில் மலைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு மலை பகுதிகளின் அனைத்து அரசு துறை மற்றும் தனியார்களின் நடவடிக்கைகளை கண்காணித்து கட்டுபடுத்தி இயற்கை வளங்கள் அழியாமலும் , சுற்றுசூழல் பாதிக்கப்படாமலும் பாதுகாக்கப்படுகின்றது .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button