
கரூரில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரை தாக்கிய இடைநிலை ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகின்றது. அந்த பள்ளியில் இடைநிலை ஆசிரியர் மீது, தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில் கோபமடைந்த இடைநிலை ஆசிரியர், தலைமை ஆசிரியரை வகுப்பறையிலேயே வைத்து தாக்குதல் நடத்தினார். அப்போது மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து கல்வித்துறையும், கரூர் நகர காவல்துறையும் தனித்தனியாக விசாரணை நடத்தி வந்த நிலையில், இடைநிலை ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


