க்ரைம்
Trending

மணிமங்கலம் பகுதியில் செயல்படும் டாஸ்மார்க் கடையை மூடாமல் ஏமாற்றும் அதிகாரிகள்

டாஸ்மாக் கடையை மூடுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு பொதுமக்களை ஏமாற்றுவதாக பொதுமக்கள் வேதனை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் ஊராட்சியில் குடியிருப்புகள் மத்தியிலும், நெடுஞ்சாலையை ஓட்டியும் டாஸ்மாக் கடை எண் 4086 மதுபான பாருடன் செயல்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மார்க் கடை மற்றும் மதுபான பாரை அகற்ற மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மார்க் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அளித்த நிலையிலும் டாஸ்மாக் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியதால் பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் மணிமங்கலம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூடுவதாக டாஸ்மாக் அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர்.

ஆனால் தற்போது தவெக அரசு ஆட்சி அமைந்தவுடன் டாஸ்மார்க் கடை மூடப்படும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்த நிலையில், டாஸ்மார்க் அதிகாரிகள் நீதிமன்றத்தையும் பொதுமக்களையும் ஏமாற்றி, டாஸ்மார்க் கடையை மூடாமல் உள்ளனர்.

தொடர்ந்து குடியிருப்பு பகுதி மற்றும் நெடுஞ்சாலை அருகே இந்த டாஸ்மாக் கடை ,மதுபான பார் இயங்குவதால் பல்வேறு சாலை விபத்துக்கள் ஏற்படுவதுடன், மது போதை ஆசாமிகள் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகளுக்கு பல வகையில் இடையூறு செய்கின்றனர்.
இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு இல்லாமல் அச்சத்துடனே வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

டாஸ்மார்க் கடையை மூடுவதாக நீதிமன்றத்தையும் பொதுமக்களையும் டாஸ்மார்க் அதிகாரிகள் அரசு உயர் அதிகாரிகள் ஏமாற்றுவது கண்டனத்துக்குரியது, இந்த பகுதியில் செயல்படும் டாஸ்மார்க் கடையை மூடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button