செய்திகள்

சங்கரன்கோவிலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி, 3 பெண்கள் படுகாயம்!

சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி பகுதியில் உள்ள சாலை வளைவில் திரும்பி கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சங்கரன்கோவில் நோக்கி வந்த ஆட்டோ, வீரசிகாமணி பகுதியில் உள்ள வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் கடையநல்லூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அப்துல்காதர் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த 3 பெண்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சேர்ந்தமரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த ஓட்டுநர் அப்துல்காதரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த மூன்று பெண்களையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதிக வேகத்தில் வந்ததா அல்லது சாலை வளைவு காரணமா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button