
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், கானா பாடல் பாடுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நள்ளிரவில் வீட்டின் அருகே அமர்ந்திருந்த நீலகண்டன், சந்துரு என்ற இரு இளைஞர்களை கஞ்சா போதையில் வந்த கும்பல் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பியோடியது. இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கஞ்சா போதையில் கொலை செய்து விட்டு தப்பியோடிய 6 இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்நிலையில் போலீசாரின் கவனக்குறைவு காரணமாகவே இந்த இரட்டைக் கொலை நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
