
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் மது போதையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை மது போதையில் இருந்த இளைஞர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறியுள்ளனர். இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட அவர், அங்கிருந்த கல்லை எடுத்து பொதுமக்கள் மீது வீச முயன்றதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இளைஞரை அடித்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற சம்பவம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. இதை தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் போதையில் சுற்றித்திரிபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், பாதுகாப்புப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


