க்ரைம்

கிருஷ்ணகிரி : 25 ஆடுகள் திருட்டு – ஒருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ரின் மற்றும் அவரது அண்ணன் அத்தாவுல்லா ஆகியோர் பர்கூர் பகுதியில் ஏ1 மட்டன் கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் முபாரக் என்பவர் 3 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு ஆட்டுத்தொட்டியில் இருந்த 25 ஆடுகளையும் முபாரக் வேனில் திருடி, ஜோலார்பேட்டை சந்தைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆடுகளின் உரிமையாளர் சந்தைக்கு சென்று பார்த்தபோது, முபாரக் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மேலும், இது குறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, முபாரக், சதீஷ்குமார் மற்றும் வேன் ஓட்டுநர் ரங்கன் ஆகியோரை கைது செய்தனர். இதில் 8 ஆடுகள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட நிலையில், மீதமிருந்த 17 ஆடுகளை போலீசார் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button