தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் சென்ற ஒரு ஆட்டோவில் இருந்து பச்சிளம் குழந்தையை சாலையில் வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து, சாலையோரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவ குறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குழந்தையை சாலையில் வீசிச் சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், குழந்தையை தாங்கள் வளர்த்துக் கொள்வதாகக் கூறி பலர் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் குழந்தையை கொடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனவும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு டாக்டர்கள் அவர்களிடம் தெரிவித்தனர்.
Read Next
2 hours ago
சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு
3 hours ago
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் – மோதிரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்
3 hours ago
மேட்டூர் அணையில் நீர் திறப்பு – 12,000 கன அடியாக அதிகரிப்பு
3 hours ago
நேபாள வெள்ளத்தில் 10 நாட்களுக்கு பிறகு மரணத்தை வென்ற 2 உயிர்கள்
3 hours ago
தூத்துக்குடி : கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு – உப்பளங்களில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
21 hours ago
தென்காசி : வேன்-கார் நேருக்கு நேர் மோதல் – வங்கி உதவி மேலாளர் பலி
22 hours ago
டெல்லியில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து – 50 மாணவர்கள் சிக்கியதாக தகவல்
22 hours ago
தென்காசி : காட்டுப்பன்றி குறுக்கே பாய்ந்ததால் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – வாலிபர் பலி
1 day ago
ஒகேனக்கல் : காவிரி ஆற்றில் சிக்கிய 13 வயது சிறுமி சடலமாக மீட்பு
1 day ago
ஆந்திராவில் செம்மரக் கடத்தல் – ரூ.10 லட்சம் மதிப்பிலான கட்டைகள் பறிமுதல்
Related Articles
Check Also
Close




