இந்திய காவல் படையின் பலம் மீண்டும் நிருபிக்கபட்டிருக்கின்றது, இம்முறையும் வாய்ப்பு கொடுத்தது ஹவுத்தி அமைப்பு செங்கடலில் சென்ற கப்பல் ஒன்றை ஹவுத்திகள் மிக அபாயமாக தாக்க அதை இந்திய காவல் படையினர் முறியடித்திருக்கின்றனர்.
இப்போதெல்லாம் வானில் மட்டுமல்ல கடலிலும் ஆளில்லா தாக்குதல்கள் பெருகிவிட்ட்ன, ஒரு படகில் வெடிபொருள் நிரப்பி கப்பலை மோத செய்வது அதிகரித்துவிட்டது . அப்படி எண்ணெய் கப்பலை தாக்க அனுப்பபட்ட வெடிகுண்டு படகை இந்திய வீரர்கள் சுட்டு வெடிக்க வைத்து கப்பலை காப்பாற்றினார்கள்.
இந்த நடவடிக்கையினை செய்ய அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் 14 நிமிடம். இந்த வகை தாக்குதல்கள் அபாயமானவை, ரஷ்ய கப்பல்கள் இப்படி தான் உக்ரைனால் மூழ்க்டிக்கபட்டன. அதாவது ரஷ்ய படைகளே எதிர்கொள்ள தயங்கும் தாக்குதல் இது . அப்படியான தாக்குதலை இந்திய காவல் படைகள் அட்டகாசமாக செய்திருக்கின்றன.
கொஞ்சமும் பதற்றமில்லாமல் படகு தாக்குதல் வீச்சுக்குள் வரும் வரை காத்திருந்து துல்லியமாக தாக்கியிருக்கின்றனர் . இந்திய படைகள் இப்படியெல்லாம் பயிற்சி பெற்றிருப்பதும் தாக்குதல்களை எளிதாக செய்வதும் உலகளவில் ஒரே ஒரு விஷயத்தைதான் சொல்ல வைக்கின்றன!!! “இ