திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துபட்டியைச் சேர்ந்த ராஜாமணி 53. இவர் தற்போது நிலக்கோட்டையில் காமராஜர் நகரில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் கோட்டை ராணி இவர்கள் இருவருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ராஜேஸ்வரி, லோகேஸ்வரி என்ற பவித்ரா 2 மகள்களும், கோட்டைச்சாமி என்ற மகனும் உள்ளார்கள். இதில் ராஜேஸ்வரி திருமணம் செய்து தனது கணவரோடு தனியாக வசித்து வருகிறார். லோகேஸ்வரி என்ற பவித்ரா வயது 27. இவர் குளத்துபட்டியைச் சேர்ந்த அரிசி கருப்பன் வயது 30 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு என்ன கருத்து வேறுபாடு காரணமாக நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருவருக்கும் சமாதானம் பேசியும் ஒத்து வராததால் இருவரும் பிரிந்து விட்டனர். அதனைத் தொடர்ந்து ராஜாமணி தனது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ரா, மனைவி கோட்டை ராணி, மகன் கோட்டை ராஜ் ஆகிய 4 பேர்களும் நிலக்கோட்டையில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டை ராணிக்கும் மகள் லோகேஸ்வரி என்ற பவித்ராக்கும் ஏற்கனவே திருமணம் செய்த அரசி கருப்பனோடு சேர்ந்து வாழ போவதாக பவித்ரா கூறியதைத் தொடர்ந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில் ஒருவருக்கொருவர் கையில் அடித்துக் கொள்ளும்போது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ரா கீழே விழுந்து தலையில் அடிபட்டு மயக்கம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து உடனடியாக தனது கணவர் ராஜாமணிக்கு கோட்டை ராணி போன் மூலம் லோகேஸ்வரி என்ற பவித்ரா கீழே விழுந்து மயங்கி கிடக்கிறார். ஆட்டோ பிடித்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் ஆட்டைப் பிடித்து வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. ராஜாமணி சம்பவ இடத்திற்கு வந்து தனது மகள் லோகேஸ்வரி என்ற பவித்ராவில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் கொடுத்தனர். இது குறித்து ராஜாமணி கொடுத்த புகாரின் படி கோட்டை ராணியை நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்டன் நல்ல கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தி நிலக்கோட்டை சிறைச்சாலையில் அடைத்தனர். தாய் மகளுக்கு இடையே நடந்த சிறு தகராறு மகள் இறந்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
வியாபாரியை வழிமறித்து படுகொலை
April 23, 2024
தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்களை கொரோனோ பரிசோதனை செய்து கொள்ளும்படி அமைச்சர் ஓ.எஸ் மணியன் வேண்டுகோள்
September 2, 2020
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
December 22, 2024