க்ரைம்
Trending

சாலையை மறித்து காரை நிறுத்திய போதை ஆசாமிகள் – கேள்வி கேட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கி அட்டூழியம்

திண்டுக்கல் பழனி பைபாஸ் கிரீன் பார்க் ஹோட்டல் அருகே தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அப்பொழுது ஒரு காரில் வந்த நபர்கள் அவ்வழியாக எதிர்ப்புறமாக வந்தனர் undefined அப்பொழுது அவர்களது காரை நடுரோட்டில் நிப்பாட்டி விட்டதால் தனியார் பேருந்து ஓட்டுனர் காரை கொஞ்சம் முன்னே நகற்றுங்கள் நான் சென்று கொள்கிறேன் என்று சொன்னபொழுது முன்னே இருக்கும் காரை நகற்ற சொல்லுங்கள் நான் போக முடியாது என்று கூறியுள்ளனர். அதற்கு ஓட்டுனர் நீங்கள் கொஞ்சம் காரை முன் நகற்றினால் நான் சென்று விடுவேன் என்று மீண்டும் கூறியுள்ளார்.இது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஆனது. அப்பொழுது காரில் வந்த நபர்கள் இறங்கி தனியார் பேருந்து ஓட்டுனருடன் வாக்குவாதம் செய்ததுடன் திடீரென்று தனியார் பேருந்து ஓட்டுனரை தாக்கத்தொடங்கினர் undefined திண்டுக்கல் பழனி பைபாஸ் கிரீன் பார்க் ஹோட்டல் அருகே பல ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களை ரோட்டிலேயே பார்க் செய்துவிட்டு செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் இது போன்ற சண்டைகள் அங்கு அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button