பணி நிரந்தரம் செய்தால் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த தயாராக இருக்கிறோம்
கட்சிக் கூட்டத்திற்கு வந்து உயிரிழந்தவர்களுக்கு அரசு வழங்கும் அரசு இறந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு வேலை வழங்க மறுக்கிறது
பொதுமக்களை ஊழியர்களை எதிர்க்க விட்டு அரசாங்கம் ரசித்துக் கொண்டிருக்கிறது
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தினர் போராடுவரும் நிலையில் சங்கத்தின் சிறப்பு தலைவர் வழக்கறிஞர் கு.பாரதி செய்தியார்களை சந்தித்து பேசினார்,
ஊதிய உயர்வை திரும்பப்பெற்று பணி நிறைந்த கோரிக்கையை வலியுறுத்தி 29 மாவட்டங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் அவர்களுக்கு குடும்பத்தினருக்கும் முறையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை. அரசு தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததால் பணி நிரந்தர கோரிக்கைக்கு போராடியவர்களை காவல்துறையினர் மூலம் அரசு ஒடுக்குகிறது. போராட்டம் நடத்தி வரும் டாஸ்மாக் சங்க ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமல் தனக்கு விருப்பமான சங்கத்தினரை அழைத்து அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்துகிறார் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை அதிகாரிகள் பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டுகின்றனர். ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசிற்கு வருமானம் ஈட்டி கொடுத்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் தான் வருடத்திற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கொடுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு அரசு வேலை வழங்காமல் கட்சிக் கூட்டத்தில் உயர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கி வருகின்றனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் எங்கள் சூழல் மாறவில்லை பத்து ரூபாய் வாங்கி பிழைக்க வேண்டும் என்ற சூழலை உருவாக்கி வைத்து விட்டனர். அதிகாரிகள் பணம் சம்பாதித்து விட்டு கொள்ளையடித்து விட்டு கிளம்பி சென்று விட்டனர். ஊழியர்கள் நடுத்தெருவில் நின்று கொண்டு உள்ளனர். கோ ஆப் டெக்ஸ், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்குவது போல டாஸ்மாக் ஊழியர்களுக்கும் ஊதியத்தை வழங்க வேண்டும். குறைந்த ஊதியத்தில் பணி செய்து வரும் ஊழியர்களிடம் கடந்த ஆட்சியில் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வந்தீர்கள் இந்த ஆட்சியிலும் அதேபோல பணிபுரியுங்கள் என கூறுவது போன்ற அநீதியான செயல் எதுவும் இருக்க முடியாது என கூறினார். ஒரு சில ஊழியர்களை தவிர பெரும்பான்மையான ஊழியர்கள் நேர்மையாக வாழ நினைக்கின்றனர் அவர்களை நேர்மையாக வாழ அனுமதியுங்கள் என கோரிக்கை வைத்தார். அரசு ஊழியர்களை போன்று டாஸ்மாக் ஊழியர்களுக்கும் பணி நிரந்தர செய்து அதற்கான ஊதியத்தை வழங்கினால் ஒரு ரூபாய் கூடுதலாக விற்பனை செய்தாலும் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு உடன்பட்டு கையெழுத்து போட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். பத்து ரூபாய் பிரச்சனை தீர வேண்டும் என்றால் பணி நிரந்தரம் மட்டுமே தீர்வாகும் பணி நிரந்தரம் செய்தால் முதலமைச்சருக்கு பாராட்டு விழா எடுக்க தயாராக இருக்கிறோம் என கூறினார்


