தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி சார்பில் நகராட்சி கூட்ட அரங்கில் நகர்புறங்களில் மக்கள் தொகை கணக்கெ-டுப்பு பணி குறித்த பயிற்சி வகுப்பு கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது ஒரு நாள் ஒன்றுக்கு 50 ஆசிரியர்கள் வீதம் 6 நாட்களுக்கு 300 ஆசிரியர்களுக்கு இதுவரை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இவர்களுக்கு மதியம் உணவு சிறிய அளவில் டப்பாவில் புளியோதரை அல்லது தயிர் சாதம், அல்லது சாம்பார் சாதம் வழங்கப்படுகிறது. இதனை பெருவாரியான ஆசிரியர்கள் உணவு சரியில்லாததால் அதனை சாப்பிட மறுத்து கடைகளில் இருந்து வாங்கி சாப்பிட்டனர் .
கடையநல்லூர் தாலுகா பகுதிகளில் கிராமப்புற மக்களுக்கு இதுபோன்ற பயிற்சி வகுப்பு தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது அங்கு அவர்களுக்கு 110 ரூபாய் மதிப்பில் தரமான கூட்டுப் பொரியல் அவியல் என சைவச் சாப்பாடு தரமாக வழங்கப்படுகிறது.
கடையநல்லூர் நகராட்சி சார்பில் வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் தக்காளி கூடையில் பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வழங்கப்படுவதால் பெருவாரியான ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த காசை கொடுத்து வெளியில் இருந்து சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர் என ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.
அதன் பின்னர் தமிழக வெற்றி கழக நகர நிர்வாகிகள் தவமணி, முகமது இஸ்மாயில், சிவா ஆகியோர் நேரடியாக சென்று ஆசிரியர்களிடம் வழங்கப்படும் உணவு குறித்து கேட்டறிந்தனர். அதன் பின்னர் நகராட்சி ஆணையாளரை நேரில் சென்று சந்தித்து பணி செய்யும் ஆசிரியர்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என கோரிக்கையை வழங்கினர்.
