க்ரைம்

அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை

திண்டுக்கல் அருகே அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்

ரூபாய் 5 லட்சம் ரொக்க பணம் மற்றும் நகைகள் கொள்ளை

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சென்னமநாயக்கன்பட்டி கிராமம் திருப்பதி பாலாஜி நகரில் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன

இந்தப் பகுதியில் அரசு ஊழியர்கள் ஏராளமானார் குடியிருந்து வருகின்றனர்

இதற்கிடையே நேற்று நள்ளிரவு இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த மூன்று நபர்கள் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்

இதில் அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜமாணிக்கம் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் பீரோவில் இருந்த
நான்கரை லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 11 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்

கொள்ளை நடந்த வீட்டில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜமாணிக்கத்தின் மகன் கார்த்திக்
நான்கு கார்த்திக்
வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்

இவர்கள் குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றிருந்தனர்

இதேபோல அடுத்தடுத்த வீடுகளில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் வெளியூர் சென்றிருந்தபோது கொள்ளை சம்பவம் நடந்துள்ளது

இதற்கிடையே அதிகாலை 1.50 அளவில் 3 பேர் இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிவது அதே பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது

இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று நபர்களில் இருவர் இறங்கிவிட்டு ஒரு நபர் தனது இரு சக்கர வாகனத்தை பின்புறமாக தள்ளிக் கொண்டே வந்து இருசக்கர வாகனத்தில் மற்ற இரு திருடர்களுக்கு டார்ச் அடித்து சிக்னல் கொடுப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது

சிசிடிவி பதிவுகளைக் கொண்டு கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தாடிக்கொம்பு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button