
கன்னியாகுமரி மாவட்டம் – திருவிதாங்கோட்டை சேர்ந்த மரியஅஞ்சலி (66) அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது அவரது 6 பவுன் தங்கச்சங்கிலி திருட்டுபோனது.
இதையடுத்து திருவட்டார் போலீசார் வேர்க்கிளம்பியில் வைத்து நகைத் திருட்டில் தொடர்புடைய பொள்ளாச்சி கொடிக்கால் பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி(44), லெட்சுமி(40) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து ரூ.21,000 பணத்தை பறிமுதல் செய்தனர்.