க்ரைம்

மீண்டும் அமோனியா கசிவா?

காசிமேட்டில் அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஐஸ் பாக்டரி நிறுவனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

சென்னை ராயபுரம் காசிமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் ஐஸ் பாக்டரியல் பணி செய்யும் ஊழியர்கள் ஐஸ் பாக்டரில் உள்ள அமோனியாவை தவறுதலாக கால்வாயில் ஊற்றி உள்ளனர். இதனால் அப்பகுதியில் அம்மோனியா வாயு பரவி மீன் மார்க்கெட் வரும் மீனவர்களுக்கு தொண்டை எரிச்சல், கண் எரிச்சல் போன்ற பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து தண்ணீர் அடித்து அமோனியா வாயு பரவலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பெரியபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான இறால் குடோனில் அமோனியா கசிவு ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் ஏற்பட்ட இந்த அம்மோனியா வாயு கசிவால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், கோட்டாட்சியர் செந்தில்நாதன், தாசில்தார் கவிதா, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சம்மந்தப்பட்ட ஐஸ் பாக்டரியில் ஆய்வு செய்து ஐஸ் பாக்டரி உரிமையாளரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button